பணியில் நிறுவனர்கள்

From The Joel on Software Translation Project

Jump to: navigation, search

ஒய் காம்பினேட்டர் எனும் நிறுவனத்தின் பங்காளியான ஜெசிக்கா லிவிங்ஸ்டன் என்பவர் சமீபத்தில் 'பணியில் நிறுவனர்கள்' என்ற புத்தகத்தை பதிப்பித்துள்ளார். இப்புத்தகம் 32 உயர்தொழில்நுட்ப கம்பெனிகளினுடைய நிறுவனர்களின் பேட்டித் தொகுப்பாகும். ஜெசிக்கா இரண்டு அத்தியாயங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் என்னுடைய பேட்டியும் இருக்கிறது. ஃபாக் க்ரீக் ஸாஃப்ட்வேரின் ஆரம்ப கால நாட்களைப் பற்றின முழுமையான அச்சுக் கதை இதுவாகவே இருக்க முடியும்.

"இத்தொழிலில் திறனில்லாத சிலர் சிற்சில செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சிறந்த மதிப்பீடுகள் கிடைக்கின்றது. நானும், அவர்களை விட எனக்குத் திறமையின்மை குறைவு என்பதை உணர்ந்து, அதே செயல்களைச் செய்வேனாயின் நிச்சயமாக அதே அளவு வெற்றிகளைப் பெறமுடியும்"

நான் இன்னும் இப்புத்தகத்தைப் படிக்கவில்லை. அமேசான் என்னுடய படியை அனுப்புவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். "ஓரிரவுக்குள் அனுப்பவும்" என்று வியாழன் அன்று தேர்தெடுத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்வதில் அமேசான் நிறுவனம் கூட பாதி-திறனின்மைக்கு மேல் இருக்கிறார்கள். கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டிகளின் பட்டியலை கவனியுங்கள்: செனட்டர்களுக்கு கேக் போல உயர் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கும் அனைவரும் இப்புத்தகத்தை விரும்புவர்.

Personal tools